Sunday, May 1, 2011

உழைக்க மறக்காதே...

                                                                                                                                                                                  படம்- கா.கே

தொலைக்காட்சியில் நாள் முழுவதும்
சிறப்புப் 'பொழுதுபோக்கு' நிகழ்ச்சிகள்
'மே முதல் தேதியை'
முன்னிட்டு!
தினந்தினம் பொழுதுபோக்கு தினங்களை
கொண்டாடும் தொலைகாட்சிச் சேனல்கள்
உழைப்பாளர் தினத்தைக் கொண்டாடுவது
வேடிக்கை!
தெருக்கோடிகளில் வியர்வை சிந்தி
உழைக்கும் உழைப்பாளர்களின் மகிழ்ச்சிக்காகவா?
இக்கொண்டாட்டம்!
கோடிகளில் - விளம்பரங்கள் தரும்
வருவாயை அனுபவிக்கும் சாக்குக்குத்தான்
இக்கொண்டாட்டம்!
தொலைக்காட்சிகளின் தினசரிக் கொண்டாட்டங்களைக்
கண்டால் உழைப்பாளர்களின் பாடு தான்
திண்டாட்டம்!

2 comments:

aotspr said...

மிகவும் அருமையான பகிர்வு......

நன்றி,
கண்ணன்
http://www.tamilcomedyworld.com

எஸ்.கார்த்திகேயன். (S.Karthikeyan.) said...

என் கருத்துகளை தங்களுடன் பகிர்ந்தமைக்கு நான் மகிழ்ச்சி அடைகிறேன் - நன்றி, கண்ணன்.

Post a Comment