எங்கள் கல்லுரியில் ஏதேனும் ஒரு மீடியாவில் இண்டர்ன்ஷிப் டிரெய்னிங் செய்யணும்னு சொன்னாங்க........... அதாவது கல்லூரியில் படிக்கும்போதுஅவரவர் படிப்பு சம்பந்தமான துறையில் பயிற்சி பெறுவதுதான் இண்டர்ன்ஷிப். நான் காட்சித் தொடர்பியல் படிப்பதால் அவை சம்பந்தமான துறையில் பயிற்சி பெற வேண்டும். அந்த விதத்தில், நான் அச்சு ஊடகத்தில் பயிற்சி பெற விரும்பி,
27 மே 2011 முதல் 10 ஜுன் 2011 வரை, ஆகிய 15 நாட்கள் ”தினமலர்” நாளிதழின் சென்னை அண்ணா சாலையில் உள்ள அலுவலகத்தில் பயிற்சி பெற்றேன்.
பயிற்சி மாணவராக இருந்தாலும், பயிற்சிக் காலத்தில் நான் எடுத்த புகைப்படங்களை செய்திகளுக்குப் பயன்படுத்திய ’தினமலர்’ நாளிதழுக்கு நன்றி.
கீழே உள்ள, நான் எடுத்த புகைப்படங்கள் தினமலரில் பிரசுரமானவை.
மே 31 2011 - தினமலர் முதல் பக்கம்
ஜூன் 6 - தினமலர், 2 ம் பக்கம், சென்னை மாநகரச் செய்திகள்
லோக்பால் மசோதா தொடர்பாக, ’ஊழலுக்கு எதிரான இந்தியா’ அமைப்பின் சார்பில் நடத்தப்பட்ட கையெழுத்து இயக்கத்தில், ஆர்வமுடன் கையெழுத்திடும் பொதுமக்கள்.
ஜூன் 6 2011 - ஆன்லைன் தினமலர் http://www.dinamalar.com/districtevent_detail.asp?news_id=252962
ஊழலுக்கு எதிரான இந்தியா அமைப்பின் சார்பில் நடைபெற்ற ஓவியப் போட்டியில் பங்குகொண்டு, ஆர்வமுடன் ஓவியம் வரையும் குழந்தைகள்
ஜூன் 8 2011 - தினமலர், 2 ம் பக்கம், சென்னை மாநகரச் செய்திகள்
சென்னை, தி.நகர் உஸ்மான் சாலையை ஆக்கிரமித்துள்ள நடைபாதை கடைகளை, மாநகராட்சியினர் மற்றும் போலீசார் தொடர்ந்து அகற்றி வருவதால், சாலையில் சிரமமின்றி, பொதுமக்கள் நடந்து செல்கின்றனர்.
அடுத்த படம்: பாலத்தின் அடியில் ஆக்கிரமித்துள்ள கடைகள்.
(நன்றி: தினமலர்)
1 comment:
வாழ்த்துக்கள்
Post a Comment