Monday, October 17, 2011

யாரவள்!


சூரியனும் ஒரு நொடி திகைத்து விட்டது
கரையினில் நிற்கும் நிலவைப் பார்த்து!                                                                      
நம்மை விட இப்படி ஓர் அழகியா? என                                                                            நாணி முகம் சிவந்து மறைகிறது                                                                   நங்கையவளை எதிர் கொள்ள முடியாமல்!

அலைகளின் ஆசையோ நிராசை தான்
அவளின் பாதங்களை மட்டுமே தழுவ முடிகிறது
அதுவும் சில நொடி இடைவேளைகளில்!

அவளது துப்பட்டாவையேனும் சொந்தமாக்க
அவா கொள்கிறது காற்று!

8 comments:

rajamelaiyur said...

//
அலைகளின் ஆசையோ நிராசை தான்
அவளின் பாதங்களை மட்டுமே தழுவ முடிகிறது
அதுவும் சில நொடி இடைவேளைகளில்!
//

அருமையான வரிகள்

rajamelaiyur said...

நல்ல கவிதை

எஸ்.கார்த்திகேயன். (S.Karthikeyan.) said...

நன்றி என் ராஜபாட்டை - ராஜா. solanum torvum பார்த்தேன். சுண்டைக்காய் நெறிக்கண் திறப்பினும் குற்றம் குற்றமே!

Unknown said...

அட அட அட என்னே வரிகள் மாப்ள....நல்லா இருக்குய்யா!

எஸ்.கார்த்திகேயன். (S.Karthikeyan.) said...

நன்றி மச்சான்.......... ஆனா உங்க அளவுக்கு வர முடியாது.

Thava said...

Kumaran :

அந்த "அவளின்" அழகு என்னையும் கவர்ந்துவிட்டது..வாழ்த்துக்கள் நண்பரே.தொடர்ந்து எழுதுங்கள்..பல வெற்றிகளை நோக்கி..

எஸ்.கார்த்திகேயன். (S.Karthikeyan.) said...

நன்றி குமரன் :-)

MyKitchen Flavors-BonAppetit!. said...

Wow!.Nalla Kavithai.Innum niraiya ezhuthungal.Vazhthukkal

Post a Comment