Showing posts with label மகளிர் தினம் மார்ச் 8. Show all posts
Showing posts with label மகளிர் தினம் மார்ச் 8. Show all posts

Thursday, March 7, 2013

ஒரு நாள் கூத்து !!



சுதந்திர தினம் கொண்டாடுகிறோம்!

புறாக்களை பறக்க விடுகிறோம்.
இனிப்புகள் பரிமாறுகிறோம்.
ஒரு நாள் கூத்து நிறைவடைகிறது.

மகளிர் தினமும் கூட கொண்டாடுகிறோம்!

புறாக்களை பறக்க விட மனமில்லையென்றாலும்
சிறகுகளையாவது ஒடிக்காமல் இருப்போம்.
இனிக்கச் செய்யாவிட்டாலும் கசப்பான அனுபவங்களை
ஏற்படுத்தாமல் இருப்போம்.
ஒரு நாள் கூத்தாக நிறைவடையாமல் சிறகடிக்கும்
சுதந்திரத்தை பகிர்ந்து வாழ்வோம் !!